பிக்பாஸ் கவின் அம்மாவிற்கு சிறை! சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் தண்டனை!

05 September 2019 சினிமா
kavin.jpg

பிக்பாஸ் நிகழ்ச்சியைக் காட்டிலும், இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் அதிக சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளனர். நடிகை வனிதா மற்றும் அவருடையக் குழந்தை விவகாரம். மீரா மிதுனுக்குப் போலீஸ் சம்மன் எனப் பல சர்ச்சைகள் இந்த போட்டியாளர்களைச் சுற்றி உலா வருகின்றது. இதற்கிடையில் நம்ம தேனடைப் புகழ் மதுமிதா மீது போலீசில் புகார். அவரும் பதிலுக்கு போலீசில் புகார் என்று, வேற லெவலுக்குச் சென்று விட்டனர்.

தற்பொழுது அடுத்த போட்டியாளரும் சிக்கிவிட்டார். வேறு யாருமல்ல, பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் மன்னனாக வலம் வரும் நடிகர், கவின் தான். அவருடைய தாய் உட்பட 5 பேருக்கு, சிறைத் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, நடிகர் கவினின் தாய் ராஜலெட்சுமி, அவர் போலீஸ் துறையில் வேலை செய்துவிட்டு விருப்ப ஓய்வு பெற்றவர். இவர் உட்பட் ஐந்து பேர் சேர்ந்து 1998 முதல் சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இதனை 2006ஆம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.

இதில் பலருக்கும் சரியானப் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனை முன்னிட்டுப் பாதிக்கப்பட்டவர்கள், போலீசில் புகார் அளித்தனர். இதனால், இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. இதனை விசாரித்த நீதிபதி, ஐந்து பேரில் இரண்டு பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள மூன்று பேருக்கு தலா ஐந்தாண்டு சிறையும், பாதிக்கப்பட்ட 29 பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாயை தரவும் உத்தரவிட்டுள்ளார்.

இது, தற்பொழுது நடிகர் கவினுக்கு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கவின் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இதனால், அவர் எவ்வாறு தன்னுடையத் தாயைத் தொடர்பு கொள்வார்? அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்குபெறுவாரா அல்லது இல்லையா என, பலரும் தம்முடையக் கருத்துக்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

HOT NEWS