தோனி இந்திய அணிக்கு திரும்ப முடியாது! ஷேவாக் தகவல்!

19 March 2020 விளையாட்டு
sehwagdhoni.jpg

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணித் தோற்று வெளியேறியது. அத்துடன் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியவர் தான், தற்பொழுது வரை அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. அவர் ஓய்வு பெற்றுவிட்டார் எனப் பலர் கூறினாலும், அவர் ஓய்வு பெறவில்லை.

தொடர்ந்து, இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார். இந்த விளையாட்டிற்குப் பிறகு நடைபெற உள்ள சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி மீண்டும் விளையாட முடியாது என, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இது குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ஏற்கனவே மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக, மாற்று வீரரைத் தேடும் முயற்சியில் பிசிசிஐ இருப்பதாகவும், இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை வைத்து இந்திய அணிக்கு தோனி திரும்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இவருடையப் பேச்சினால், தற்பொழுது தல தோனியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர். அவர் வருகின்ற டி20 உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS