அயோக்கியா திரை விமர்சனம்!

12 May 2019 சினிமா
ayogyareview.jpg

ரேட்டிங் 3.2/5

நேற்று வெளியாக வேண்டிய, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள அயோக்கியா திரைப்படம், ஒரு சிலப் பிரச்சனைகளின் காரணமாக, இன்று வெளியானது. பொதுவாக, விஷால் படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் அதிகம் உண்டு. இப்படம் குடும்பத்துடன் பார்ப்பதற்காகவே, பார்த்துப் பார்த்து எடுத்திருக்கின்றனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைப் பற்றிய படம் என்றுக் கூட கூறினால், அது மிகையாகாது.

சிறிய வயதில் பெற்றோரை இழந்த விஷால், ஆனந்த்ராஜ்ஜின் அரவணைப்பில் வளர்கிறார். திருடனைக் காட்டிலும், போலீசால் மட்டுமே நிறைய சம்பாதிக்க முடியும் என நினைக்கும் விஷால், போலீசாக மாறுகிறார். சும்மா சொல்லக் கூடாது. போலீஸ் கெட்டப்பில், கச்சிதமாக இருக்கும், தமிழ் நடிகர்களில் விஷால் குறிப்பிடத்தக்கவர். கர்ணன் என்றக் கதாப்பாத்திரத்தில் வரும் விஷால், படம் முழுக்க அதகளம் செய்கிறார். பின்னர், ராசி கண்ணாவைக் கண்டதும் காதல் பற்றிக் கொள்கிறது. அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார்.

நேர்மையான காவல் அதிகாரியாக ராசிக் கண்ணாவின், தூண்டுதலால் மாறுகிறார். அப்பொழுது, படத்தின் வில்லனாக வரும், பார்த்திபனை எதிர்க்கிறார். பார்த்திபனைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு கதாப்பாத்திரம் என, தனக்கு வழங்கப்படும் வேடங்களை சிறப்பாக செய்பவர். இந்தப் படத்திலும் சிறப்பாக செய்கிறார். படத்தில் வரும் பாடல் காட்சிகள் சுமார் ரகம். அருமையான ஒளிப்பதிவைத் தந்துள்ளார், ஒளிப்பதிவாளர் வி.ஐ. கார்த்திக்.

பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தர, வேறு வழியில்லாமல், தானே குற்றவாளிகளுடன் தூக்கு மேடை ஏறும் க்ளைமாக்ஸ் மட்டுமே, படத்தில் உறுத்தலான விஷயம் ஆகும். தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான, டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் என்றாலும், படத்தின், வேறு விதமாக எழுதியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் மோகன்.

படத்தில், தற்பொழுது பெண்களுக்கு எதிராக நடந்து வரும், பாலியல் குற்றங்களைப் பற்றி எடுத்துள்ளதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்தத்தில், அயோக்கியா அயோக்கியத்தனம்.

HOT NEWS