அடுத்த ஆப்பு! இனி வெள்ளிக் கிழமை விடுமுறை!

17 August 2019 அரசியல்
car.jpg

இந்திய வாகனத் துறை உலகிலேயே தற்பொழுது, அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள துறை எனக் கூறலாம். அந்த அளவிற்கு அதன் நிலைமை, மிக மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் வரை, வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.

தொடர் வியாபார மந்தம் காரணமாக, வாகனத் தொழிற்சாலைகள் தங்களுடைய உற்பத்தியினைக் குறைத்துள்ளனர். இதன் காரணமாக, வாகனத் துறையில் வேலைப் பார்க்கும், மறைமுக ஊழியர் முதல், பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வரை, கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். லாபம் குறைய ஆரம்பித்ததால், பலரை வீட்டிற்கு அனுப்பி வைத்த நிறுவனங்கள்.

இந்நிலையில் மாருதி சூசுக்கி கம்பெனியின் சேர்மன் ஆர்சி பார்க்கவா பேசுகையில், மாருதி நிறுவனத்தில், 3,000 ஒப்பந்த ஊழியர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். இனி வரும் காலங்களில் இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், மாருதி மோட்டார் கார்ப், ஹீரோ மோட்டார் கார்ப், அசோக் லேலேண்ட், டிவிஎஸ் குரூப் ஆகிய நிறுவனங்கள், இனி வெள்ளிக் கிழமைகளில் வேலையினை வழங்காது. மாறாக விடுமுறை அல்லது வேறு எதாவது செய்யும்.

கண்டிப்பாக, வெள்ளிக் கிழமை வேலையும், அதற்கான ஊதியம் கொடுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். வெள்ளி, சனி, ஞாயிறு என கிட்டத்தட்ட மாதத்தில் பாதி நாட்கள், விடுமுறையில் கழிகின்றது என்பதால், சம்பளம் குறித்து, தற்பொழுது மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

HOT NEWS