இந்திய மகளிர் அணி போராடி தோல்வி! ஆஸ்திரேலியா சாம்பியன்!

09 March 2020 விளையாட்டு
womenst20wc.jpg

மகளிர் இருபது ஓவர் டி20 போட்டியில், இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலியா மகளிர் அணியும் மோதின. இந்தப் போட்டியானது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், நான்கு விக்கெட்டுகளை இழந்து, 184 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீராங்கணைகள் அலிசா ஹீலே 75(39), பெத் மூனே 78(54), மெக் லான்னிங் 16(15), அஸ்லி கார்ட்னர் 2(3), ரேச்சல் ஹேனஸ் 4(5), நிக்கோலா கேரி 5(5) ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் சார்பில், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீராங்கணைகள் களமிறங்கினர். ஆஸ்திரேலிய வீராங்கணைகளின் துல்லியமானப் பந்துவீச்சால், இந்திய வீராங்கணைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி, 19.1 ஓவரில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாஃபாலி வர்மா 2(3), ஸ்மிருதி மந்தனா 11(8), தானியா பாட்யா 2(4), ஜெமிமா ரோட்ரிகஸ் 0(2), ஹர்மான்ப்ரீத் கௌர் 4(7), தீப்தி சர்மா 33(35), வேதா கிருஷ்ணமூர்த்தி 19(24), ரிச்சா கோஷ் 18(18), சிக்கா பாண்டே 2(4), ராதா யாதவ் 1(5), பூனம் யாதவ் 1(5) மற்றும் ராஜேஸ்வரி கெயிக்வார்ட் 1(3) ரன்கள் எடுத்தனர்.

இதனால் இந்திய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியினைத் தழுவியது. சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீராங்கணைகள் மீகன் ஸ்கட் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் ஜோனஸ்ஸன் 3 விக்கெட்டுகளையும், சோபி மோலினிக்ஸ், டெலிசா கிம்மன்ஸ் மற்றும் நிக்கோலா கேரி ஆகியோர் தலா ஒரு விக்கெடும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் வென்றதன் காரணமாக, 2020 இருபது ஓவர் கிரிக்கெட் கோப்பையினை, ஆஸ்திரேலியா மகளிர் அணி வென்றது. அலிசா ஹீலே ஆட்ட நாயகி விருதும், பெத் மூன்னே தொடர் நாயகி விருதும் பெற்றனர்.

HOT NEWS