துணைவியின் அக்கவுண்டை ஹேக் செய்த விண்வெளி பெண்! அதிர்ச்சி செய்தி!

26 August 2019 தொழில்நுட்பம்
annemcclain.jpg

தற்பொழுது உலகம் முழுவதையும் பரபரப்பாக்கியுள்ள செய்தி தான் இது. சர்வதேச விண்வெளி மையத்தினை அமெரிக்கா, ஜப்பான், கன்னடா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா சேர்ந்து கூட்டாக உருவாக்கி உள்ளன. அவர்கள், தங்களுடைய வீரர்களை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி, அங்கு ஆய்வுகள் செய்து வருகின்றன.

இந்நிலையில், அங்கு 203 நாட்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்த ஆன்னி மெக்லைன் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. புவியில் இருந்த பொழுது, ஆன்னி மெக்லைன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சம்மர் ஓர்டன். அவருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தார் ஆன்னி. பின் இருவரும் சேர்ந்து ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சட்டப்படி விவாகரத்துப் பெற்றுள்ளனர்.

அமெரிக்க விமானப்படையில் வேலை செய்து வந்த ஆன்னி, சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசாவின் மூலம் வந்துவிட்டார். அங்கிருந்து சம்மர் ஓர்டனின் வங்கிக் கணக்கை விண்வெளியில் இருந்து, ஆன்னி பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார் ஓர்டன். இதனை ஆன்னின் வழக்கறிஞரும், ஆன் இதனை ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து ஆன் சொன்னதாக வழக்கறிஞர் ஒரு விஷயத்தை முன் வைத்தார். அதன்படி, ஆன் மற்றும் ஓர்டன் ஆகியோர் இணைந்து, ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். அப்பையனை யார் பார்த்துக் கொள்கின்றார்கள் என்பதை உறுதி செய்வதற்காகவே, ஆன் அந்த ஓர்டனின் வங்கிக் கணக்கை திறந்துப் பார்த்ததாக, கூறினார். ஆனால், சம்மர் ஓர்டன் கூறுகையில், என்னுடையப் பணத்தினை ஆன் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. என் வங்கிக் கணக்கில், பணத்தினைக் காணவில்லை எனக் கூறியுள்ளார்.

இதுவே விண்வெளியில் நடைபெற்றுள்ள முதல் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விண்வெளி சட்டத்தின்படி, விண்வெளியில் நடக்கும் குற்றங்களுக்கு, அந்தந்த நாடுகளேப் பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதற்கான தண்டனையையும் அந்தந்த நாடுகளேப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது புவிக்குத் திரும்பியுள்ள ஆன், இப்படியொரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கிறார்.

HOT NEWS