ஆசிய அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணியின் வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினர்.
பத்து நாடுகள் கலந்து கொண்ட போட்டியில், ஜப்பான் அணியின் எட்டு தங்கம், நான்கு வெள்ளி, 4 வெண்கலம் வென்று, 16 பதக்கங்களுடன் முதலிடத்திலும், 7 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 17 பதக்கங்களுடன், ஈரான் நாடு இரண்டாம் இடத்திலும், 5 தங்கம், 2 வெள்ளி மற்றும் 12 வெண்கலத்துடன் இந்திய அணி, பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
19 பதக்கங்களுடன் கஜகஸ்தான் நான்காம் இடத்திலும், 11 பதக்கங்களுடன் கிரிபிஸ்தான் ஐந்தாம் இடத்திலும், 10 பதக்கங்களுடன் உஸ்பகிஸ்தான் ஆறாம் இடத்திலும், 6 பதக்கங்களுடன் தென் கொரியா ஏழாம் இடத்திலும், 8 பதக்கங்களுடன் மங்கோலியா எட்டாம் இடத்திலும், 4 பதக்கங்களுடன் தஜிகிஸ்தான் ஒன்பதாம் இடத்திலும், ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்ற ஈராக் பத்தாம் இடத்தினையும் பிடித்தன.
இந்திய அணியே, இந்த பத்து நாடுகளில் 20 பதக்கங்களை வென்று அசத்திய ஒரே நாடாகும். மற்ற நாடுகள் அனைத்துமே, 20 பதக்கங்களைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.