அஸ்வின் புதிய சாதனை! முரளிதரனின் சாதனையை சமன் செய்தார்!

06 October 2019 விளையாட்டு
ravichandranashwin.jpg

இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், விக்கெட் எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில், 350 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, மூன்று ஒரு நாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 போட்டியில் இரண்டு அணிகளும், 1-1 என்ற கணக்கில் வென்றதால், அந்தத் தொடர் சமனில் முடிந்தது.

இந்நிலையில், தற்பொழுது முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இப்போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டும் எடுத்தார்.

இந்தப் போட்டியையும் சேர்த்து, டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக, 350 விக்கெட்டுகளை கடந்து, ரவிச்சந்திரன் அஸ்வின், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார். இதனை, அஸ்வினின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS