டெல்லி டேர்டெவில்ஸ் செல்லும் அஸ்வின்! அறிவிப்பு விரைவில்!

08 November 2019 விளையாட்டு
ashwint20.jpg

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த, ரவிச்சந்திரன் அஸ்வின், தற்பொழுது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்குச் செல்ல உள்ளது உறுதியானது.

தமிழக வீரரும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்ந்திரன் அஸ்வின், பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடி வருகின்றார். அவர் அடுத்த வருடம் நடக்க உள்ள ஐபிஎல் டி20 போட்டியில், பஞ்சாப் அணிக்காக விளையாடப் போவதில்லை. அவரை டெல்லி அணி தற்பொழுது வாங்கியுள்ளது. அவருக்குப் பதிலாக டெல்லியில் இருந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜே சுச்சித், பஞ்சாபிற்கு செல்ல உள்ளார். மேலும், அவருடன் 1.5 கோடி ரூபாயினை அஸ்வினிற்குப் பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பஞ்சாப் அணிக்கு வழங்க உள்ளது.

டெல்லிக்கு அஸ்வின் செல்வதன் மூலம், அஸ்வினுக்கு சுமார் 7.6 கோடி ரூபாய் கிடைக்கும். இந்தத் தகவலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துணை முதலாளி நாஷ் வாடியா உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றோம். அனைவருக்கும் இதில் பூரண சம்மதம். இது குறித்து, ஐபிஎல் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுவிட்டோம். அஸ்வின் வருங்காலத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என அவர் கூறியுள்ளார்.

மொத்தம் 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக, பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து, சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார் அஸ்வின். தற்பொழுது டெல்லி அணிக்குச் சென்றுள்ளது அந்த அணியின் பலத்தினை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பஞ்சாப் அணிக்குப் புதிய கேப்டனாக, கேஎல் ராகுல் இருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS