ஆஷஸ் 3வது போட்டி! இங்கிலாந்து சறுக்கல்!

24 August 2019 விளையாட்டு
archer.jpg

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்த ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின், மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 179 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில் டேவிட் வார்னர் 61 மற்றும் மார்னஸ் 74 ரன்கள் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளையும், பிராட் 2, ஓக்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்சை ஆடுவதற்கு இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 67 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் டென்லி அதிகபட்சமாக 12 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணியின் ஹசல்வுட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், கும்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து, தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆட ஆஸ்திரேலியா அணி களமிறங்கியுள்ளது. தற்பொழுது வரை ஆஸ்திரேலியா அணி, 57 ஓவரில், 6 விக்கெட்டுகளை இழந்து, 171 ரன்கள் குவித்துள்ளது. மார்னஸ் 53, ஹெட் 25, வேட் 33 ரன்களை குவித்தனர்.

இங்கிலாந்து சார்பில், பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஓக்ஸ் மற்றும் லீச் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி 283 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக உள்ளது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடர உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

HOT NEWS