அர்ஜென்டினா-கத்தார் போட்டி! 2-0 கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி!

24 June 2019 விளையாட்டு
argvsqat.jpg

கோப்பா அமெரிக்கா போட்டியில், அர்ஜென்டினா அணி, கத்தார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில், மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியும், கத்தார் அணியும் மோதின. இதில் அர்ஜென்டினா அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

இதுவரை இவ்வளவு பெரிய ரசிகர்கள் முன்னிலையில் விளையாடாத கத்தார் அணி, 39,100 ரசிகர்கள் முன்னிலையில் நின்ற பொழுது பார்த்த ரசிகர்களுக்கே தெரிந்திருக்கும். அந்த அளவிற்கு கத்தார் அணியானது பயத்துடனே விளையாடியது.

அர்ஜென்டினா அணியின் மார்டினஸ் மற்றும் அகுரோ ஆகியோர் கோல் அடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

கோப்பா அமெரிக்காவின் பி பிரிவில் இடம்பெற்றுள்ள, அர்ஜென்டினா அணி கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு முன் கொலம்பியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கிலும், பராகுவே அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்துள்ளது. இந்நிலையில், இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

HOT NEWS