52 இடங்களில் குறி வைக்கப்பட்டுள்ளது! ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

06 January 2020 அரசியல்
trump2.jpg

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில், தற்பொழுது போர் மூழும் அபாயம் உண்டாகி உள்ளது.

ஈரானைச் சேர்ந்த குவாசிம் சுல்மானி என்ற முக்கியப் படைத் தலைவரை, அமெரிக்க விமானப் படையானது, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால், சுல்மானி கொல்லப்பட்டார்.

இதனையடுத்து, அவருடைய ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரான் அரசாங்கமும், அமெரிக்காவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் அக்கவுண்ட் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவருடைய டிவிட்டீல், உடனடியாக, ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும். அமெரிக்கர்கள் மீதோ அல்லது அமெரிக்காவின் நிலைகள் மீதோ, ஈரான் தாக்குதல் நடத்தினால், கண்டிப்பாக ஈரானிற்கு சொந்தமான முக்கிய இடங்கள் தாக்கப்படும்.

சுமார், 52 இடங்கள் தற்பொழுது குறி வைகப்பட்டுள்ளன. ஈரான் பழிவாங்கும் நடவடிக்கை என எதிலாவது ஈடுபட்டால், கண்டிப்பாக அந்நாட்டின் புராதாண மற்றும் பெருமை வாய்ந்த இடங்கள் தாக்கி அழிக்கப்படும். ஏற்கனவே, நூற்றுக்கும் மேற்பட்ட ஈரானியர்கள் அமெரிக்க தூதரகத்தினை தாக்கியுள்ளனர். அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் பெரிய புனிதர் அல்ல. பல பேரினை கொன்றவர் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS