சிரியாவிற்கு கூடுதல் படகைள அனுப்பும் அமெரிக்கா! துருக்கி மோதலால் முடிவு!

25 October 2019 அரசியல்
syriantroops.jpg

சிரியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள எண்ணெய் கிணறுகளைப் பாதுகாப்பதற்காக, அங்கு தன்னுடைய கூடுதல் பாதுகாப்புப் படைகளை அனுப்ப, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை மாலை வரை, சண்டையிடுவதை கைவிட்டு இருந்தது துருக்கி. ஆனால், செவ்வாய் மாலைக்குள் சிரியாவில் உள்ள குர்த் ஜனநாயகப் படையானது, உடனடியாக வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தது. இல்லையென்றால், குர்த் படையினரின் தலைகள், தரையில் நசுக்கப்படும் என, துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், குர்த் படையினரையும் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்கப் படைகள் குர்த் படைகளுடன் இணைந்து, சிரியாவின் கிழக்குப் பகுதிகளில் உள்ள எண்ணெய் பகுதிகளை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளது. துருக்கி அப்பகுதியில் தாக்குதல் நடத்தினால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கவும், அப்பகுதியில் உள்ள எண்ணெய் வளங்களைப் பாதுகாக்கவும் இந்த இடத்திற்கு செல்ல உள்ளது.

தொடர்ந்து, சிரியாவில் உள்நாட்டு கலவரங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிரியா மீதான துருக்கியின் தாக்குதல், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிச்சலை உருவாக்கி உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

மேலும், இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், கடந்த செவ்வாய் கிழமை வரை, அமைத ஒப்பந்தத்தை மதித்த எர்டோகன், தொடர்ந்து, தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கூறினார். ஏற்கனவே, 100 பில்லியன் அளவுள்ள வர்த்தகத் தடையினை அமெரிக்கா அரசாங்கம், துருக்கியின் மீது விதிக்கும் என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS