பிரசன்னா-சினேகா தம்பதிக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது!

25 January 2020 சினிமா
prasannasneha.jpg

நடிகர் பிரசன்னா-சினேகா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தைப் பிறந்துள்ளது. இதனை பிரசன்னா தன்னுடைய டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ், புதுப்பேட்டை உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் சினேகா, கண்ட நாள் முதல், சீனா தான 001 உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் பிரசன்னா. இருவரும், கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனையடுத்து, 2015ம் ஆண்டு பிரசன்னா-சினேகா தம்பதியினருக்கு ஆண் குழந்தைப் பிறந்தது.

இதனைத் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த சினேகா, தற்பொழுது மீண்டும் பட்டாஸ் திரைப்படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார். நடிகர் பிரசன்னாவும் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில், தற்பொழுது இந்த தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தைப் பிறந்துள்ளது. இதனால், அவர்களுக்கு தமிழ் சினிமாவின் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது பற்றி தன்னுடைய டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரசன்னா, தை மாதத்தில் தனக்குப் புதிதாக பெண் குழந்தைப் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

HOT NEWS