தம்பி தற்கொலை குறித்து பேட்டியளித்த ஆனந்த் ராஜ்! ஏன் தற்கொலை செய்து கொண்டார்?

09 March 2020 சினிமா
anandrajbrother.jpg

நடிகர் ஆனந்த் ராஜ்ஜின் தம்பி, கனக சபை என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்த் ராஜ் தற்கொலை குறித்து, விளக்கம் அளித்தார்.

அவர் பேசுகையில், என் தம்பி ஏலச் சீட்டு நடத்தியதாகவும், அதில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் நம்புகின்றனர். உண்மையைக் கூறுகின்றேன். என் தம்பி, நஷ்டத்தால் இறக்கவில்லை.

அவனை சிலர் தொடர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால் தான், வேறு வழியில்லாமல் தற்கொலை செய்யும் முடிவினை அவர் எடுத்துள்ளார் எனவும், அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள திருமுடி நகரில் வசித்து வந்த ஆனந்த்ராஜ்ஜின் தம்பி கனகசபை, விஷம் அருந்தி தற்கொலைச் செய்துகொண்டார்.

HOT NEWS