கொரோனா வைரஸால் 300 பேர் பலி! 17,000 பேர் பாதிப்பு! 328 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்!

03 February 2020 அரசியல்
coronavirus.jpg

சீனாவில் உள்ள பொதுமக்கள், தற்பொழுது சாதாரணமாக வீதியில் நடமாடவேப் பயப்படுகின்றனர். அந்த அளவிற்கு, இந்த கொரோனா வைரஸ் பாதிப்பானது மிக மோசமானதாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த இந்த நோயானது, ஒரு மாதத்திற்குள் 17,000 பேருக்குப் பரவி உள்ளது. அதுமட்டுமின்றி, சுமார் 30 நாடுகளுக்கு இந்த நோயானது பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை, இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக, 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். அதே சமயம், இந்த நோய்க்கு சிகிச்சைப் பெற்றவர்கள் 328 பேர், வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளனர்.

இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு, தற்பொழுது சிறப்பான சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், முழுமையான தடுப்பு மருந்தோ அல்லது குணமாக்கும் மருந்தோ, தற்பொழுது வரை கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும், மனிதனுடைய எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி, இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை குணமாக்கி உள்ளனர்.

இந்த வைரஸானது, ஊஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்தது. அதற்கு அருகில் உள்ள வென்ஷோவ் என்ற நகரில் மட்டும் சுமார் 265 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், அந்த நகரில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் தரமான முகமூடி அணிய முடியமால், பொதுமக்கள் திணறி வருகின்றனர்.

இதனால், இப்பொழுது முகமூடி தயாரிக்கும் பணியானது முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 80 லட்சம் முகமூடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில், அது ஒரு கோடியாக மாற்றப்படும் எனவும் பின்னர் படிப்படியாக, அதன் முகமூடி தயாரிக்கும் அளவு அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

HOT NEWS