சீமான் மீது வழக்குப் பதிவு! ஆவேசப் பேச்சால் இரண்டு பிரிவுகளில் வழக்கு!

14 October 2019 அரசியல்
seeman-election-symbol.jpg

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் மீது, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளுக்கு, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஒவ்வ்வொரு மேடையிலும், ஆளங்கட்சிகளையும், எதிர் கட்சிகளையும் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றார். இந்நிலையில், அவர் தற்பொழுது, விக்கிரவாண்டித் தொகுதியில் பேசிய பேச்சு தான் வைரலாகி உள்ளது.

அவர் பேசுகையில், ராஜீவ் காந்தியை என் இனத்தின் எதிரியை, தமிழன் தன் தாய் நிலத்தில் கொன்று புதைத்தான் என்னும் வரலாறு உள்ளது. என்று பேசினார். இது காங்கிரஸ் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இது குறித்து பேசுகையில், சீமான் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேச துரோக வழக்கினைப் பதிவு செய்ய வேண்டும் எனவும், கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சீமான் மீது வன்முறையைத் தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது, விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

HOT NEWS