உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் சீனாவில் நிறுவப்பட்டது! ஏலியன் கிடைக்குமா என ஆய்வு!

23 January 2020 தொழில்நுட்பம்
telescope.jpg

சீனாவில், உலகிலேயே மிகப் பெரிய தொலைநோக்கியானது நிறுவப்பட்டு உள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய விட்டமுடைய தொலை நோக்கியானது, சீனாவில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, பல சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது முழுமையான செயல்பாட்டிற்கு அந்த தொலைநோக்கியானது வந்துள்ளது. சுமார், 500 மீட்டர் விட்டமுடைய இந்த ரேடியோ தொலைநோக்கியானது, பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்டமாக காட்சித் தருகின்றது.

இந்த தொலைநோக்கியினை உருவாக்க, சுமார் 170 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொலையோக்கியின் மூலம், ஒரு வினாடிக்கு 38 ஜிபி டேட்டாவினை பெற இயலும். இந்த தொலைநோக்கியானது, இதற்கு முந்தைய பெரிய தொலைநோக்கியான அரிசிபோ ரேடியோ அப்சர்வேட்டரி தொலைநோக்கியினை விட, சுமார் 2.5 மடங்கு அதிக செயல்திறன் கொண்டது.

இதன் வேகமானது, மற்ற தொலைநோக்கிகளை காட்டிலும் மிக அதிகமாக இருப்பதாகவும், இதன் மூலம், அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களை அடையாளம் காண இயலும் எனவும், புதிய உயிரினங்கள் ஏதேனும் பிரபஞ்சத்தில் இருக்கின்றதா எனவும் எளிதாக கண்டறிய இயலும் எனவும் சீன விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS