மேற்கு இந்தியத் தீவுகள் தொடரில் தல தோனி விளையாடுவாரா?

16 November 2019 விளையாட்டு
dhonistumping.jpg

கடந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடியது தான், தல தோனியை கடைசியாக நாம் விளையாடிப் பார்த்தது. பிறகு, அவர் கிரிக்கெட் விளையாடவில்லை. மேலும், இந்தியாவின் பாராமிலிட்டரிக்குச் சென்று, அங்குள்ள இராணுவ வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.

பின்னர், நீண்ட ஓய்வில் தல தோனி உள்ளார். அவர் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள இந்திய-மேற்கு இந்தியத் தீவுகள் தொடரில் பங்கேற்பார் என, பிசிசிஐயும் எதிர்பார்த்து வந்தது.

இந்நிலையில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்த பொழுது, அதிலிருந்து விடுப்பு பெற்றார் தோனி. பின்னர், தற்பொழுது வங்கதேச அணியுடன் நடைபெற்று வரும் தொடரிலும், தோனி விளையாடவில்லை. அவர் ஓய்வு பெற உள்ளார் என்ற அறிவிப்பும், அவ்வப்பொழுது வந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே, வரும் டிசம்பர் மாதம், மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. அந்த சுற்றுப் பயணத்தில், டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் ஆகியவை இடம்பெற உள்ளன. இதில், தல தோனி பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஒரு வேளை, அவர் அந்தத் தொடரில் விளையாடினால், கண்டிப்பாக அது தோனியின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் என்றால், அதில் சந்தேகமே இல்லை.

HOT NEWS