சீனாவிற்கு செல்லும் WHO குழுவினர்! 14ம் தேதி தொடங்கும் கொரோனா விசாரணை!

12 January 2021 அரசியல்
whochief.jpg

சீனாவிற்கு வருகின்ற 14ம் தேதி அன்று செல்லும் உலக சுகாதார மையக் குழுவினர், அங்கு எப்படி கொரோனா உருவானது என சோதனை செய்ய உள்ளனர்.

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், கொரோனா வைரஸானது உலகம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. இதற்கு தற்பொழுது தான், பல நாடுகளில் மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்ற போதிலும், உலகம் முழுக்க இதற்கான மருந்துகளானது முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரவில்லை. இன்னும் தொடர்ந்து கொரோனா வைரஸானது பரவிய வண்ணம் உள்ளது. இதற்கு காரணமாக இருந்து சீனாவின் மீதுப் பல நாடுகள் தங்களுடைய் புகார்களை தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்டப் பல நாடுகளும் சீனாவின் மீது கடும் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தனர். இதற்கு சீனாத் தொடர்ந்து தங்களுடைய மறுப்பினைப் பதிவு செய்து வந்தது. இந்த நிலையில், உலக சுகாதார மையமும், சீனாவிற்கு உதவியாக இருப்பதாக கூறி, அமெரிக்கா தன்னுடைய நிதியினை நிறுத்திக்க கொண்டது. அத்துடன், அந்த அமைப்பில் இருந்தும் வெளியேறியது.

இதனால், உலக சுகாதார மையத்தின் மீதான நம்பகத் தன்மையும் கேள்விக் குறியானது. இதனைத் தொடர்ந்து, தங்கள் மீது படிந்து கரைகளை நீக்கும் பொருட்டு, உலக சுகாதார மையமானது, கொரோனா வைரஸ் எப்படி பரவியது, எங்கிருந்து பரவ ஆரம்பித்தது உள்ளிட்டவைகளை விசாரிக்க, சீனாவிற்கு தங்களுடையக் குழுவினை அனுப்ப உள்ளதாக தெரிவித்தது. இதனை சீனா முதலில் ஏற்கவே இல்லை.

பின்னர், உலக நாடுகளின் எதிர்ப்பினைப் புரிந்து கொண்டு, சீனா இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியது. இருந்த போதிலும், தாங்கள் யாரை அனுமதிக்கின்றோமோ அவர்கள் மட்டுமே, எங்களுடைய நாட்டிற்குள் விசாரணை நடத்த முடியும் என்றுக் கூறியுள்ளது. இந்தக் குழுவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம் பெற்று உள்ளனர். இருப்பினும், இந்த விசாரணையானது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என, பலருக்கும் தெரியவில்லை. இந்த விசாரணையானது 14ம் தேதி சீனாவில் துங்குகின்றது. இதற்கு 10 பேர் கொண்ட குழுவானது சீனாவிற்கு செல்ல உள்ளது.

HOT NEWS