வாட்ஸ் ஆப் பே வசதி இந்தியாவில் துவக்கம்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

18 December 2020 தொழில்நுட்பம்
whatsapp.jpg

இந்தியாவில் தற்பொழுது வாட்ஸ் ஆப் நிறுவனமானது, தற்பொழுது வாட்ஸ் ஆப் பே வசதியினை வழங்க ஆரம்பித்து உள்ளது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக இலவசமாக, தங்களுடைய சேவையினை வாட்ஸ் ஆப் நிறுவனமானது வழங்கி வருகின்றது. இதனை பல கோடி இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது வாட்ஸ் ஆப் நிறுவனமானது, பணப் பரிவர்த்தைக்காக புதிய வசதியினை, வாட்ஸ் ஆப்பில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, இனி வாட்ஸ் ஆப்பினைப் பயன்படுத்தி, நம்மால் பணப் பரிவர்த்தனை செய்ய இயலும்.

அதற்காக இந்தியாவின் பணப்பரிவர்த்தனை அமைப்பான யூபிஐ உடன் உடன்படிக்கை செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதற்காக கடந்த நவம்பர் மாதமே, அனுமதி கேட்டுள்ளது வாட்ஸ் ஆப், தற்பொழுது அனுமதிக் கிடைத்துள்ளதால் இதனைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வசதியில் எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி ஆகியவையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளன. தற்பொழுது இந்தியாவில் உள்ள 2 கோடி பேருக்கு, இந்த வசதியானது வழங்கப்பட்டு உள்ளது எனவும், விரைவில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது எனவும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS