இது அந்தர் பல்டிடா சாமி! பயனர்கள் விலகியதால் முடிவினை மாற்றிக் கொண்ட வாட்ஸ்ஆப்!

16 January 2021 தொழில்நுட்பம்
whatsapp.jpg

தங்களுடைய பயனர்கள் அதிகளவில் நீங்கியதன் காரணமாக, தங்களுடைய புதிய கொள்கையினை மே 15ம் மேதி வரை ஒத்தி வைப்பதாக, அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

தங்கள் பயனர்களின் தகவலை பேஸ்புக்கின் சர்வர்களில் சேமித்து வைப்பது குறித்து, புதிய தகவலையும், கொள்கைகளையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டது. இதற்குப் பலரும் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர். இனி வாட்ஸ் ஆப்பில் தனி நபருக்கு சுதந்திரம் இருக்காது எனவும், அதனை அன் இன்ஸ்டால் செய்வோம் எனவும், நெட்டிசன்கள் கூற ஆரம்பித்தனர்.

பேஸ்புக் ஏற்கனவே பயனர்களின் தகவல்களைப் பலருடன் பகிர்ந்து வருவதாக, பலப் புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதனால், பல கோடி பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியில் இருந்து விலகி, சிக்னல், டெலிகிராம் உள்ளிட்டவைகளுக்கு சென்றனர். இதனால், வாட்ஸ்ஆப் செயலிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தங்களுடைய பயனர்களின் கணக்குகள் பிப்ரவரி 8ம் தேதி அன்று நீக்கப்படாது எனவும், அதற்குப் பின்னரும் செயல்படும் எனவும் கூறியது வாட்ஸ் ஆப். அதே போல், தற்பொழுது புதிய அறிவிப்பினையும் வெளியிட்டு உள்ளது.

அதன் படி, தங்களுடையப் புதியக் கொள்கைகளை வருகின்ற மே 15ம் தேதி வரை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்து உள்ளது. இதனால், பயனர்கள் இந்த செயலியில் இருந்து விலகி குறையும் என நம்பப்படுகின்றது.

HOT NEWS