வெ.இண்டீஸ் வெற்றி! இங்கிலாந்து முதல் டெஸ்ட்டில் சொதப்பல்!

13 July 2020 விளையாட்டு
wivseng.jpg

இங்கிலாந்தில் நடைபெற்றும் முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், தற்பொழுது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்தது. அதில், இங்கிலாந்து அணியும், வெ.இண்டீஸ் அணியும் மோதின.

முதல் போட்டியானது, ஜூலை 8ம் தேதி அன்று சௌத்தாம்ப்டன் பகுதியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சினைத் தேர்வு செய்தது. இதில், இங்கிலாந்து அணி 67.3 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 43 ரன்களைக் குவித்தார். வெ. இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் அபாரமாகப் பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்ரியல் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய வெ.இண்டீஸ் அணி 102 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 318 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பிராத்வொயிட் 65 ரன்களும், டொவ்ரிச் 61 ரன்களும், ரோஷ்டன் சேஸ் 47 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில், ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆன்டர்சன் 3 விக்கெட்டுகளையும், டாம் 2 மற்றும் மார்க் உட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணியானது, சீரான இடைவெயில் தன்னுடைய விக்கெட்டினைப் பறிகொடுத்தது. அந்த அணி, 111.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 313 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் க்ராவ்லே 76 ரன்களும், சிப்லே 50 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 42 ரன்களும் குவித்தனர். வெ. இண்டீஸ் அணியின் சார்பில், காப்ரியல் 5 விக்கெட்டுகளையும், சேஸ் மற்றும் ஜோசப் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஹோல்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

வெ.இண்டீஸ் அணி வெறும் ஆறு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 64.2 ஓவரில், 200 ரன்களைக் குவித்து வெற்றிப் பெற்றது. அந்த அணியின் வீரர்கள் பிளாக்வுட் 95 ரன்களும், சேஸ் 37 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில், ஆர்சர் 3 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், மார்க் உட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், வெ.இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

HOT NEWS