வார் திரைவிமர்சனம்!

03 October 2019 சினிமா
warreview.jpg

பலத் தோல்வித் திரைப்படங்கள், பல கிண்டல்கள் என ஹிருத்திக் ரோசன் பார்க்காத விஷயம் இல்லை. கடந்த ஆண்டு, அவருடையப் பிறந்தநாள் அன்றே, யார்இந்தஹிருத்திக் என்ற ஹேஸ்டேக் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது.

அப்படிப் பேசியவர்களுக்கு தக்க அடியை இல்லை மரண அடியை பரிசாக அளித்துள்ளார் பாலிவுட் மசில் மேன் ஹிருதிக் ரோஷன். இந்த ஆண்டு வெளியாகும் இரண்டாவது ஹிருத்திக் திரைப்படம். முதல் திரைப்படமான சூப்பர் 30 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வார் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

அனைத்துத் தரப்பு ரசிகர்களுமே, இந்தத் திரைப்படத்தினை ரசித்து வருகின்றனர். படத்தில் டைகர் ஷெராப்பும் மிரட்டியுள்ளார். இரண்டு முன்னணி நடிகர்களுக்கு ஏற்ற, திரைக்கதை உள்ளத் திரைப்படமா என்றால், கண்டிப்பாக எனலாம்.

ஒரு இராணுவ வேலையின் பொழுது, ஒருவரை ரோஷன் கொன்று விடுகிறார். இதனால், அவருடன் ஜூனியராக வேலை செய்த, டைகர் ஷெராப் களமிறக்கப்படுகிறார். அவர், நல்லவார இல்லை கெட்டவரா என்பதனை கூறும் விதத்தில், சுவாரஷ்யம் வைத்துள்ளனர். படத்தின் கதை என்னமோ, அழுகப் பழையக் கதை தான். வழக்கம் போல ஒரு துரோகி. அவனை கண்டுபிடிக்கும் ஹீரோ என, ஒரே கதையை தான் திரைப்படமாக எடுப்பது தான் எரிச்சலான விஷயம்.

இரண்டு நடிகர்களுமே, நல்ல உடலமைப்பு உள்ளவர்கள் என்பதால், படம் முழுக்க சட்டையைக் கழற்றி விட்டுக் கொண்டு தான் தெரிகின்றனர். சண்டைக் காட்சிகளில், ஒரு லாஜிக்கும் இருக்காது. பல இடங்களில், இவர்களை பில்டப் செய்து காட்ட வேண்டும் என்பதற்காக, ஸ்லோமோஷன் சீன்களை அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

படத்தின் திரைக்கதைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, படத்தின் கதைக்கும் கொடுத்திருந்தால், நிச்சயமாக வார் திரைப்படம் தமிழிலும் வெற்றி அடையும். ஆனால், இப்படம் முழுக்க, முழுக்க பாலிவுட் ரசிகர்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டதால், அங்கு இப்படி, பாக்ஸ் ஆபிஸ் சாதனை செய்யவும் வாய்ப்புள்ளது.

ரேட்டிங் 3/5

HOT NEWS