சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!

02 February 2021 சினிமா
vjchitradead.jpg

நடிகை சித்ரா தூக்கிட்டுத் தான் தற்கொலை செய்து கொண்டார் என, நிபுணர் குழுவானது உறுதி செய்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ம் தேதி அன்று, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடையக் கணவரை அறைக்கு வெளியே அனுப்பி விட்டு, தான் அணிந்திருந்த சேலையினை பயன்படுத்தி, மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி, இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. இதன் காரணமாக, அவருடையக் கணவர் ஹேமநாத்தினை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

நடிகை விஜே சித்ரா மரணத்தினை அடுத்து, சந்தேகத்தின் பேரில் கடந்த டிசம்பர் 14ம் தேதி அன்று, ஹேமநாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பல விதமான விஷயங்கள் சித்ராவின் மரணத்தினை விசாரிக்கையில் வெளியானது. அதில், நடிகை சித்ராவிற்குப் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது உறுதியானது. அத்துடன், அவர் மதுப் பழக்கமும், கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் உள்ளவராக இருந்துள்ளார்.

ஹேமநாத் நிரபராதி எனவும், அவருக்கு இதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனவும், ஹேமநாத்தின் தந்தைத் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில், நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு முறையீடு செய்கையில், சீரியல்களில் நடிக்கக் கூடாது எனக் வற்புறுத்தியதாகவும், சித்ராவின் நடத்தையில் சந்தேகம் வந்ததால் அவரை கேள்விக் கேட்டதாகவும், மற்றப்படி அவரை நான் எந்தத் தொந்தரவும் செய்யவில்லை எனவும் ஹேமநாத் கூறியுள்ளார்.

எனக்கும், சித்ராவிற்கும் இடையில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை எனவும், நான் குற்றமற்றவன் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், நிபுணர் குழுவானது நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையினைத் தாக்கல் செய்தது. அதில், சித்ரா தூக்கிட்டுத் தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்பட்டு உள்ளது. இதனால், இந்த வழக்கின் விசாரணையினை பிப்ரவரி 5ம் தேதிக்கு, நீதிபதி ஒத்தி வைத்தார்.

HOT NEWS