சித்ராவிற்கு இருந்த மது பழக்கம்! போதை பொருளை பயன்படுத்தினாரா? என்ன இருந்தது ஹேண்ட் பேக்கில்?

05 January 2021 அரசியல்
vjchitra.jpg

தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவிற்கு மதுப் பழக்கம் இருந்ததாக கூறப்படுகின்ற நிலையில், அவருடைய பையில் கஞ்சா இருந்ததாக செய்திகள் தெரிவிக்கன்றன.

சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய ஓட்டல் அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதால், வழக்கினைத் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருடைய மரணம் தொடர்பாக, அவருடைய கணவர் ஹேமநாத்தினை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரைப் பலிகடாவாக போலீசார் பயன்படுத்தி வருவதாகவும், வேறு யாரையோ காப்பாற்ற போலீஸ் முயல்கின்றது எனவும் அவருடைய தந்தை தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில், போலீசாருக்கு தகவல் அளித்து வந்த ஹேமநாத்தின் தந்தை, அவருடைய தகவலில் ஹேமநாத்தும், சித்ராவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள் எனவும், சித்ராவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது எனவும் தெரிவித்தார். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் ஹேண்ட்பேக்கினை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், 150 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்ததாக, தகவல்கள் கசிந்துள்ளன.

சித்ராவிற்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்ததா என, அவருடைய சொந்தங்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில், இவருக்கு இந்தப் பழக்கம் இருப்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், சித்ராவிற்கு கஞ்சா வாங்கித் தருவது யார் என தற்பொழுது விசாரணை தீவிரமடைந்து உள்ளது.

HOT NEWS