ஐபிஎல் போட்டிகளை விட்டு விலகியது விவோ! ஜியோ உள்ளே வர வாய்ப்பு!

05 August 2020 விளையாட்டு
ipl.jpg

இந்தியாவின் தவிர்க்க முடியாத விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக இருப்பது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். இது தற்பொழுது நடைபெறாமல் உள்ளது. ஊரடங்கின் காரணமாக, இந்த விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ஏற்கனவே வெளியாகி விட்டது.

இதனிடையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், சீனப் பொருட்களின் மீது இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக தடையினை விதித்து வருகின்றது. அதே போல், இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகளை விதித்தும் வருகின்றது. இதனால், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்பொழுது சிக்கல்கள் நிலவி வருகின்றது.

இதனிடையே, ஐபிஎல் போட்டிக்கு விளம்பரதாரராக இருந்து வரும் விவோ நிறுவனத்தினை நீக்க வேண்டும் என, இந்தியர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். விவோவிற்கு இந்திய அளவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, பிசிசிஐ தற்பொழுது அதிரடி முடிவினை எடுத்துள்ளது. அதன்படி, ஐபில் போட்டிக்கு விளம்பரதாரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட விவோ நிறுவனத்துடனான, ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால், விவோ ஐபிஎல் என இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறது. தற்பொழுது உள்ள சூழ்நிலையில், ஜியோ ஐபிஎல் என நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இந்தியாவில் தற்பொழுது பெரிய நிறுவனங்கள் என, டாடா மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமே உள்ளது. இவர்களில், ஜியோ நிறுவனம் விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், அவர்கள் இந்த ஐபிஎல் போட்டிக்கு விளம்பரதாராக இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS