வரலாற்று நாயகனாக மாறிய விராட் கோலி! கங்குலி, தோனி சாதனைகள் தகர்ப்பு!

26 August 2019 விளையாட்டு
viratkohli1.jpg

வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளில், அதிக வெற்றிகளைக் குவித்த இந்தியக் கேப்டன் என்றப் பெருமையை தற்பொழுது, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி பெற்றுள்ளார். நேற்று 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், மற்றுமொரு சாதனையை செய்துள்ளார். இதற்கு முன் 304 ரன்கள் வித்தியாசத்தில் எதிரி நாட்டினை வீழ்த்தியதே இந்திய கிரிக்கெட் அணியின் சாதனையாக இருந்தது.

வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், இதுவரை கோலி தலைமையிலான இந்திய அணி 26 போட்டிகளில் விளையாடி, 12 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கு முன், தாதா என செல்லமாக அழைக்கப்பட்ட கேப்டன் கங்குலி 28 போட்டிகளில், 11 வெற்றிகளைப் பெற்று இருந்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றிப் பெற்றதால், கங்குலியின் சாதனையை முறியடித்தார் கோலி. இருப்பினும், தோனியின் சாதனையை நெருங்க முடியவில்லை.

தல தோனி மொத்தம் 27 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை நெருங்க கோலிக்கு, இன்னும் மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே உரசல்கள் வேறு ஏற்பட்டு உள்ளது. 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், இந்த வித்தியாசத்தின் அடிப்படையில், தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். அதே போல், மிக விரைவாக உலக போட்டிகளில், 100 வெற்றிகளையும் பெற்ற, மூன்றாவது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.

எவ்வாறு இருப்பினும், கேப்டனாக மகேந்திர சிங் தோனி செய்துள்ள சாதனைகளை சமன் செய்வதற்கே, இன்னும் பல வருடங்கள் ஆகும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS