விக்ரம் கமல்ஹாசனின் 232வது படம் காப்பியா? சர்ச்சைக்குள்ளான டீசர்!

09 November 2020 சினிமா
vikramfirstlook.jpg

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளன்று, அவர் நடிக்கின்ற படத்தின் பெயரானது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியன் பார்ட் 2 படமானது, அடுத்த வருடம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், அடுத்து அவர் என்ன படத்தில் நடிப்பார் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், கமல்ஹாசனை அவருடைய ரசிகரும், பிரபல இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் சென்று சந்தித்து ஆலோசனை செய்தார். இருவரும் இணைந்து ஒரு படத்தினை உருவாக்க முடிவு செய்தனர்.

அந்தப் படத்தின் அறிவிப்பானது, கடந்த மாதம் வெளியானது. அந்த அறிவிப்பில், கமல்ஹாசனின் பெயரும், லோகேஷ் கனகராஜ் பெயரும் இடம் பெற்று இருந்தன. இந்த படத்திற்கு அனிருத் இசையக்கின்றார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தினை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கின்றது. இந்த சூழலில், நவம்பர் 7ம் தேதி அன்று கமலுடையப் பிறந்தநாளினை முன்னிட்டு, அந்தப் படத்தின் பெயரானது வெளியிடப்பட்டது.

இந்தப் படத்திற்கு விக்ரம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்திற்காக, வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், கமல்ஹாசன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை, ஒரு வீட்டில் வைக்கின்றார். அந்த வீட்டிற்கு முகமூடி அணிந்தப் பலரும் வந்து அமர்கின்றனர். அப்பொழுது, ஆரம்பிச்சடளாங்களா என கமல்ஹாசன் கூறுகின்றார். இந்தப் படம், அடுத்த தேர்தலுக்கு முன் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரபரப்பாகவும், வைரலாகவும் பேசப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில், இந்த டீசரானது காப்பி என இணையத்தில் கிழித்து வருகின்றனர். இணைய ஊடகமான நெட்பிளிக்ஸில் நார்கோஸ் மெக்சிகோ சீசன்-2 என்ற தொடர் ஒளிபரப்பானது. அதில் உள்ள காட்சிகள் தான், தற்பொழுது வெளியாகி உள்ள விக்ரம் டீசரில் இடம் பெற்றுள்ளன. இந்த நார்கோஸ் மெக்சிகோ சீசன்-2 டீசர் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியானது. ஏற்கனவே கமலைப் பலரும் ஹாலிவுட்டினைக் காப்பியடித்து படம் எடுப்பவர் என, பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் மீதும் பலக் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றது. கைதி, படமும் காப்பி எனவும், மாஸ்டர் படமும் கொரியன் படத்தின் காப்பி எனவும் பலர் கிண்டல் செய்து ஆதாரங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS