மதுரையில் விஜய் மாபெரும் சாதனை! 75,000 டிக்கெட்கள் முதல் நாளில் விற்பனை!

13 January 2021 சினிமா
master111.jpg

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில், லலித் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தின் இசையானது கடந்த ஆண்டே வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது. இந்தப் படமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த சூழலில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையறங்குகள் மூடப்பட்டது. இந்த சூழலில், இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக வெளியானது.

இந்தப் படத்திற்கு ஏற்கனவேப் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், தற்பொழுது விஜயின் படம் மட்டுமே ஒரு ஆண்டு கழித்து வெளியாவாதல், ரசிகர்கள் பேதம் என எதுவுமின்றி, அனைத்து நடிகர்களின் ரசிகர்களுமே திரையறங்குகளில் குவிந்து வருகின்றனர். தென் தமிழகத்தினைப் பொறுத்த வரையில், விஜயின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது நிதர்சனமான உண்மை. இன்று விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்காக அனைத்துத் திரையறங்குகளுமே ஒதுக்கப்பட்டு உள்ளன.

மதுரையில் உள்ள அனைத்துத் திரையறங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே வெளியாகி உள்ளது. அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. மதுரையில் முதல் நாள் காட்சிக்கு மட்டும் சுமார், 75,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இன்னும் பொங்கல் விடுமுறை வேறு உள்ளதால், இந்தப் படத்தின் வசூலானது 300 கோடியினைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS