வெள்ளைப் பூக்கள் திரை விமர்சனம்!

19 April 2019 சினிமா
vellaipookal.jpg

ரேட்டிங் 3.8/5

பொதுவாக நடிகர் சார்லி மற்றும் விவேக்கின் ஜோடி இணைந்தாலே, அந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் என்பது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது போல இத்திரைப்படமும், ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறும் என்பதில், எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த அளவிற்கு, இத்திரைப்படம் நன்றாகவே உள்ளது.

படத்தின் நாயகனின் அப்பாவாக விவேக் நடித்துள்ளாரா, அல்லது அப்பா தான் நாயகனா என்று கேள்வி எழும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விவேக். தன்னுடைய மகன் வெளிநாட்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், வேலை செய்கிறான். அங்கு உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்தும் கொள்கிறான்.

அவனைப் பார்க்க செல்லும் அப்பாவிற்கு, அப்பெண் மீது பாசம் இல்லை. இந்த சூழ்நிலையில், அங்கு நடிகர் சார்லி, விவேக்கிற்கு அறிமுகம் ஆகிறார். திடீரென்று விவேக்கை சுற்றியுள்ள நபர்கள், மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அதனை விவேக் விசாரிக்க, ஆரம்பிக்கிறார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வரும் விவேக், ஒரு கொள்ளைக் கூட்டம் தான் இத்தகைய செயல்களை செய்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவர்கள் எதற்காக செய்தார்கள், அவர்களை இவர் வென்றாரா என்பது தான் படத்தின் மீதி கதை.

படத்தில் வரும் பாடல்கள் சுமாராக இருந்தாலும், படத்தின் பின்னணி இசை பிரமாதமாக உள்ளது. படத்தின் இயக்குநருக்கு இதுவே முதல் திரைப்படம் என்றால் யாராலும், நம்ப முடியாது. அந்த அளவிற்கு ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநரைப் போல இப்படத்தை எடுத்துள்ளார்.

இப்படத்தில் ஒரு சில இடங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், அது படத்தின் சுவையையும், வேகத்தையும், திரைக்கதையையும் எவ்விதத்திலும் குறைத்துவிடவில்லை.

மொத்தத்தில், வெள்ளைப் பூக்கள் வெளிநாட்டுப் பூக்கள்.

HOT NEWS