கமல் படத்தில் வடிவேலு! ரசிகர்கள் கொண்டாட்டம்!

25 September 2019 சினிமா
singaravelan.jpg

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும், தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைய உள்ளார்.

கடைசியாக நாம் மெர்சல் திரைப்படத்தில், வைகப் புயல் வடிவேலுவைப் பார்த்து ரசித்தோம். பின் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில், அவர் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், இயக்குநர் திரு. சிம்புதேவனுடன் ஏற்பட்ட மோதலால், இப்படத்தில் இருந்து நடிக்க மறுத்து வெளியில் வந்தார் வடிவேலு. இதனால், இயக்குநர் சங்கருக்கு நஷ்டம் ஏற்பட்டது என, நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இருப்பினும், வடிவேலு தரப்பில் இருந்து சரி வரத் தகவல்கள் இல்லை. இதனால், மீண்டும் சினிமாவில் இருந்து, சற்று ஒதுங்கி இருந்தார் வடிவேலு. இந்நிலையில், மீண்டும் கமல்ஹாசன் படத்தில் நடிக்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும், தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தில், ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். ராஜ்கமல்பிலிம்ஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் ஆகியவை, இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் தொடங்கி உள்ளன. பிறக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் பணியில், கமல் ஈடுபட்டுள்ளார். தற்பொழுது, கிடைத்துள்ள தகவலின் படி, வைகைப் புயல் வடிவேலுவும், இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை.

HOT NEWS