மயான மேற்கூரை இடிந்ததால் விபரீதம்! இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பலி!

04 January 2021 அரசியல்
muradnagarincident.jpg

உத்திரப்பிரதேச மாநிலத்தில், மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்திரப்பிரதேச மாநிலம் முராத்நகரில், உள்ளூர்வாசியான ராம்தான் என்பவர் மரணமடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் பலரும் கலந்து கொண்டனர். அப்பொழுது திடீரென்று கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால், அந்த நிகழ்விற்காக வந்திருந்தவர்கள், அருகிலிருந்த தகன மேடைக்கு அருகில் ஒதுங்கினர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த மேடையின் மேற்கூரையானது இடிந்து விழுந்தது.

அதில் சிக்கி 50க்கும் அதிகமானோர் மாட்டிக் கொண்டனர். இதில் எதிர்பாராத விதமாக தற்பொழுது வரை 20 பேர் பலியாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து காஜியாபாத் நகர போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஈராஜ் ராஜா பேசுகையில், ஒரு கொட்டகை இடிந்து விழுந்ததால் 38 பேர் மாட்டிக் கொண்டனர்.

அவர்களில் 20 பேர் பலியாகி உள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடைபெற்று வருகின்றது எனவும் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 2 லட்ச ரூபாயானது, நிவாரணமாக வழங்கப்படும் என, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS