மின்னல் வீரர் உசைன் போல்ட்டிற்கு கொரோனா!

25 August 2020 விளையாட்டு
usainbolt.jpg

உலகின் நம்பர் ஒன் தடகள வீரரான உசைன் போல்ட்டிற்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து நேற்று ஜமைக்காவின் சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில், உலகின் நம்பர் ஒன் தடகள வீரரான உசைன் போல்ட்டிற்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றினை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றதா என, பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் அதன் முடிவிற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். எனவே, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS