தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்! இங்கிலாந்தினை தொடர்ந்து அமெரிக்காவிலும் சிக்கல்!

14 October 2020 அரசியல்
coronaplasma.jpg

இங்கிலாந்தில் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டு பின் தொடரப்பட்டு உள்ள நிலையில், தற்பொழுது அமெரிக்காவிலும் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது, வேகமாகப் பரவி வருகின்றது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகியும் உள்ளனர். இந்த சூழ்நிலையில், அங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியானது, தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில், பல முன்னணி நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்த சூழ்நிலையில், ஒரு பிரபல மருந்து தயாரிக்கும் நிறுவனமானது, தன்னுடைய பரிசோதனையினை நிறுத்தியது. அந்த நிறுவனம் தயாரித்துள்ள மருந்தினை ஏற்றுக் கொண்ட நபரின் முதுகுப் பகுதியில், விவரிக்க முடியாத ஒரு அலர்ஜி ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும், அது சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த தடுப்பு மருந்தானது, பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், உலகப் பிரசித்திப்ப எற்ற ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் தன்னுடைய சோதனையினை நிறுத்தி உள்ளது.

அந்த நிறுவனம் தயாரித்துள்ள மருந்தானது, திடீரென்று எதிர்பாராத விதமாகப் பல பக்கவிளைவுகளை உண்டாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அவசர கால மருத்துவர்களும், பாதுகாப்பு ஆய்வாளர்களும் அந்தத் தன்னார்வலருக்கு அவசர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், இது எதிர்பார்க்கபடக் கூடிய ஒன்று தான். பரிசோதனைகளில் இவைகள் எல்லாம் சகஜமான விஷயமாகும் என்றுக் கூறியுள்ளது.

தற்பொழுது அந்த மருந்தின் மீதான பரிசோதனையானது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மற்றொரு மருந்து தயாரிக்கும் நிறுவனம் 12 முதல் 15 வயதுள்ள சிறுவர்களிடமும் 3ம் கட்ட பரிசோதனையினை செய்வதற்கான அனுமதியினை அமெரிக்க அரசிடம் பெற்றுள்ளது. தற்பொழுது அந்த நிறுவனம், அதன் மருந்தினை 42 ஆயிரம் நபர்களிடம் பரிசோதிக்க முடிவு செய்துள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS