ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பக்க விளைவுகள் நிறைந்தது! சிடிசி எச்சரிக்கை!

23 May 2020 அரசியல்
hydroxychloroquine.jpg

மலேரியா நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தால், பெரியளவில் பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்காவின் சிடிசி அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸில், அமெரிக்கா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 90,000 பேர் மரணமடைந்து உள்ளனர். பதினைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால், பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது, கொரோனா வைரஸிற்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இதனையேப் பயன்படுத்தி வருகின்றார். இந்த மருந்து குறித்துப் பேசியுள்ள அமெரிக்க சுகாதார அமைப்பு, தற்பொழுது ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளது.

இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தானது, அதிக பக்க விளைவுகளை உடையது எனவும், இதனைப் பயன்படுத்தினால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த மருந்தினைப் பயன்படுத்தினாலும், மரணத்தின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என எச்சரித்துள்ளது.

HOT NEWS