இந்தியாவுடன் பயிற்சிக்கு வரும் வெடிகுண்டு அரக்கன்! US பி2 ஸ்டெல்த் பாம்பர்!

18 August 2020 அரசியல்
usstealthfighter.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்பொழுது, மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவுடன் விமானப் பயிற்சிக்காக அமெரிக்க விமாப்படையானது இந்தியாவிற்கு வர உள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் தற்பொழுது மிக நெருக்கமாக உள்ளன. அதே சமயம், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் கடும் பொருளாதாரச் சண்டையானது, நீடித்து வருகின்றது. இதனால், இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் விதமாகவும், சீனாவிற்கு அச்சுறுத்தல் தரும் வகையிலும், அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதில், தற்பொழுது புதிதாக கூட்டு விமானப் பயிற்சியினை அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செய்ய உள்ளன. இதற்காக சர்ச்சைக்குரியப் பகுதியாக இருக்கும் இந்திய சீன எல்லையில் இந்த பயிற்சி நடைபெறும் என, ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்தப் பயிற்சியில் 30 ஆண்டுகளாகப் பணியில் இருக்கின்ற, அமெரிக்காவின் மிகப் பெரிய குண்டு எரியும் விமானமான பி-2 ஸ்டெல்த் விமானம் வர உள்ளது.

இந்த விமானம் தான், உலகிலேயே அதிகளவில் வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டு, பறந்து கொண்டே எதிரிகள் மீது துல்லிமாக குண்டுவீசும் சக்தி படைத்தது. 30 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதில் உள்ள வசதிகளும், தொழில்நுட்பங்களும் ஒவ்வொரு மாதமும் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன. அந்த விமானத்தின் கட்டுமானத்திலும் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த விமானம் இந்தியாவிற்கு வந்தது என்றால், கண்டிப்பாக அது சீனாவின் வயிற்றில் புளியைக் கரைக்கும் என்றால், அது மிகையாகாது.

source:- nationalinterest.org/blog/buzz/could-us-b-2-stealth-bombers-take-chinese-air-defenses-167008

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS