பேஸ்புக் மீது ஒரே நேரத்தில் பல வழக்குகள்! சிறிய வலைதளங்களை மடக்குவதாக குற்றச்சாட்டு!

12 December 2020 அரசியல்
markzuckerbergsecurity.jpg

உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளமாக பேஸ்புக் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மீது, தற்பொழுது அமெரிக்க அரசும், அதன் 48 மாகாண அரசுகளும் ஒரே சமயத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளன.

உலகிலேயே பல நூறு கோடி பயனர்களைக் கொண்டுள்ள சமூக வலைதளமாக பேஸ்புக் நிறுவனம் உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே, இதன் மதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வந்தது. இந்த பேஸ்புக்கில் இல்லாத பிரபலங்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு இது விளம்பரத்திற்காகவும், பயன்பாட்டிற்காகவும் பெயர் பெற்றது. சமீபகாலமாக இதன் மீதுப் பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன. பயனர்களின் தனிப்பட்டத் தகவல்கள் திருடப்படுவது, விளம்பரங்களுக்காக தனிமனிதத் தகவல்கள் விற்கப்படுவது என பல்வேறுக் குற்றச்சாட்டுக்களுக்கு பேஸ்புக் நிறுவனம் ஆளானது.

இதனிடையே, தற்பொழுது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் உள்ளிட்டப் பிரபலமடைந்து வந்த சமூக வலைதளங்களையும் பணத்தினை கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இதனால், மற்ற சமூக வலைதளங்களும், சமூக ஊடகங்களும் வளர முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் இனியும் எவ்வித சமூக வலைதளங்களும் உருவாக முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டுர பேஸ்புக் மீது, அந்நாட்டு மாகாண அரசும், அந்நாட்டு அரசும் தற்பொழுது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளன.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS