வானில் இருந்து வந்த சிக்னல்

10 March 2019 தொழில்நுட்பம்
space.jpg

உலகிலுள்ள அனைத்து வானவியல் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் தற்பொழுது செய்து வரும் முக்கிய ஆராய்ச்சி என்ன தெரியுமா? ஒரு சிக்னல். ஆம், தற்பொழுது அனைத்து வானவியல் விஞ்ஞானிகளும் அந்த சிக்னலைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

150 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் இருந்து, ஒரு மர்மமான சிக்னல் ஒன்று கன்னடாவில் உள்ள தொலைநோக்கிக்கு வந்துள்ளது. கனடாவில் உள்ள தொலைநோக்கியில் இந்த சிக்னல் பதிவாகியுள்ளது. அதனை தற்பொழுது ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் இதனை வேற்றுக் கிரக மனிதர்கள் அனுப்பியிருக்க அதிக வாய்ப்புகள் உண்டு என்கின்றனர்.

மேலும், இந்த சிக்னலைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், நம் மனிதர்கள் இதற்கு முன்னர், ஏற்கனவே ஒரு சிக்னலை ஹலோ என்று அனுப்பி வைத்தனர். தற்பொழுது கிடைத்திருக்கும் சிக்னலை வைத்துப் பார்க்கும்பொழுது, நாம் அனுப்பியதற்காக பதிலாகக் கூட இருக்க வாய்ப்புகள் உள்ளன என்கிறார்.

விஞ்ஞானிகளின் கணிப்புப்படி 2020ல் இருந்து 2022க்குள் நம் மனிதர்களால் வேற்றுக் கிரகவாசிகளை காண இயலும் என நம்புகின்றனர். எது எப்படி இருப்பினும், பிரச்சனைகள் இந்த ஆராய்ச்சிகளால் வர இருப்பது உறுதி.

HOT NEWS