வறுமையில் நாடு! வளர்ப்பு நாய்க்கு தங்கத்தில் சிலை! உலகளவில் அதிருப்தி!

17 November 2020 அரசியல்
turkmenistandog.jpg

வறுமையில் துருக்மெனிஸ்தான் நாடே இருக்கையில், தன்னுடைய வளர்ப்பு நாய்க்காக பிரம்மாண்டமான தங்கச் சிலையினை அந்நாட்டு அதிபர் உருவாக்கியிருப்பது, அந்நாட்டு மக்களிடம் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.

உலகளவில் பலப் பிரச்சனைகள், பொருளாதார சிக்கல்கள், போர் பதற்றங்கள், எல்லைப் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. இவைகள் அனைத்தும், அனைத்து நாடுகளிலும் பெரிய அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே துருக்மெனிஸ்தான் என்ற நாடானது, கடுமையான நிதி நெருக்கடியிலும், பொருளாதார சிக்கலிலும் உள்ளது. அந்த நாட்டில், வறுமையானது தலை விரித்து ஆடுகின்றது.

இந்த சூழலில், ஆசியன் செப்பர்ட் பிரிவினைச் சேர்ந்த அலே நாய்க்கு, அந்நாட்டு அதிபர் குர்பாங்குலே பெர்த்முக்ஹாமீதோவ் தங்கத்தில் சிலை வைத்துள்ளார். இந்த சிலையானது, அவருடைய வளர்ப்பு நாயின் நினைவாக வைக்கப்பட்டு உள்ளது. முற்றிலும் தங்கத்தால் இந்த சிலையானது உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நாயானது, தேசிய விலங்காகவும், அடையாளமாகவும் பார்க்கப்பட்டு வருகின்றது.

இது போன்று, நாய்க்கு சிலை வைப்பது ஒன்றும் அந்த நாட்டு அதிபருக்குப் புதிதல்ல. தொடர்ந்து பல இடங்களிலும், பல முறை இவ்வாறான சிலைகளை அவர் வைத்து இருக்கின்றார். இந்த நாய் சிலைக்கு கீழே, எல்இடி திரையானது பொறுத்தப்பட்டு உள்ளது. அதில், அந்த நாய் எப்படி வாழ்ந்தது என, பல்வேறு விதமான வீடியோக்களும், போட்டோக்களும் ஓடுகின்றது. இந்த சிலைக்கு எவ்வளவு செலவானது என சரியாக யாருக்கும் தெரியவில்லை.

HOT NEWS