தடம் புரண்ட ரயில்! 3 பேர் பலி! அசம்பாவிதம் தவிர்ப்பு!

13 August 2020 அரசியல்
scotlandderailed.jpg

ஸ்காட்லாந்து நாட்டில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி, 3 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

ஸ்காட்லாந்து நாட்டில், தற்பொழுது கனமழைப் பெய்து வருகின்றது. அங்குள்ள வடகிழக்கு பகுதியில் உள்ள அபர்டீன்சைர் என்ற இடத்தில், பயணிகள் ரயிலானது தடம் புரண்டது. இதனால், அந்த ரயிலினை இயக்கிய ஓட்டுநர், கண்டெக்டர் மற்றும் பயணி உட்பட மூன்று பேர் பலியாகி உள்ளனர். கடுமையான மழை மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக, ரயில் தடம் புரண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்துக் குறித்து, தற்பொழுது அதிகாரிகள் முழுவீச்சில் விசாரணை செய்து வருகின்றனர். இப்பகுதியில் விபத்துகள் நடக்க வாய்ப்பிருப்பதாக, ஏற்கனவே பிரிட்டிஷ் ரயில்வே அமைப்பு நான்கு வாரங்களுக்கு முன்பு, கணித்து எச்சரித்து இருந்தது. இந்த சூழ்நிலையில், இந்த விபத்து நடைபெற்று உள்ளது.

இந்த பயணிகள் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும், பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். காயமடைந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம், அமைதியான நாடான ஸ்காட்லாந்தில், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS