டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணி! ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு!

07 January 2021 அரசியல்
farmersprotestmarch.jpg

41 நாட்களைக் கடந்துள்ள விவசாயிகள் போராட்டத்தில், தற்பொழுது டிராக்டர் பேரணியானது நடைபெற்று வருகின்றது.

பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் விவசாயிகள், புதியதாகக் கொண்டு வரப்பட்டு உள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலமுறை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ள போதிலும், விவசாயிகளின் போராட்டத்தினை ஏற்கவோ அல்லது வேளாண் சட்டங்களைப் பின் வாங்கவோ போவதில்லை என மத்திய அரசு உறுதியுடன் தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து, பெண் விவசாயிகள் டிராக்டரினை ஓட்டிக் கொண்டு, டெல்லியின் டிக்ரி மற்றும் சிங்கூ எல்லைப் பகுதிக்கு ஆயிரக்கணக்கில் சென்று கொண்டு இருக்கின்றனர். இவர்களுடையப் போராட்டங்களை பெருமளவிலான, டிவிக்களும், செய்தி ஊடகங்களும் காட்டுவது கிடையாது. இதனால், இவர்கள் தங்களுடையப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக, ஜனவரி 7ம் தேதிக் காலை 11 மணிக்கு டிராக்டர் அணி வகுப்புப் போராட்டத்தினை நடத்த உள்ளதாகத் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, தற்பொழுது சிங்கூ பகுதியில் இருந்து டிக்ரிக்கும், பின்னர் டிக்ரி பகுதியில் இருந்து குண்ட்லீக்கும், அதற்கடுத்ததாக காசிபூர் பகுதியில் இருந்து பால்வால் பகுதிக்கும், ரீவாசன் பகுதியில் இருந்து பால்வால் பகுதிக்கும் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். சுமார் 4 பகுதிகளில் இந்தப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடும் மழை மற்றும் குளிரானது நிலவி வருகின்ற சூழலில், இவர்கள் தங்களுடையப் போராட்டத்தினை கைவிடுவதாகத் தெரியவில்லை.

HOT NEWS