இனி டேனியல் க்ரைக் கிடையாது! இவர் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்ட்!

21 September 2020 சினிமா
danielcraig.jpg

ஹாலிவுட் படங்களில் பிரசித்திப் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இனி நடிக்கமாட்டேன் என, டேனியல் க்ரைக் கூறியதைத் தொடர்ந்து, அந்தப் படங்களில் நடிக்க டாம் ஹார்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

உலக அளவில் பிரசித்திப் பெற்ற ஹாலிவுட் படமாக ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் உள்ளன. இந்த ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் அனைத்தும் இங்கிலாந்து உளவுத்துறையான எம்ஐ6 அமைப்பினை, அடிப்படையாகக் கொண்டவை. இதில், பல்வேறு நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்து உள்ளனர். தற்பொழுது டேனியல் க்ரைக் கதாநாயகனாக நடித்து வருகின்றார். அவர், நடித்துள்ள நோ டைம் டூ டை திரைப்படமானது, தற்பொழுது வெளியாக உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இனி நான் நடிக்கமாட்டேன் என, அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால், அடுத்த ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகன் யார் என, பலரும் அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்து இருந்தனர். அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க கருப்பின நடிகர் ஒருவரின் பெயர் அடிபட்டது. இருப்பினும், தற்பொழுது அந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகரின் பெயரானது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

43 வயதான ஹாலிவுட் நடிகர் டாம் ஹார்டி தான் தற்பொழுது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே, மேட் மேக்ஸ் ப்யூரி ரோட், ரெவணன்ட், வெனம், இன்செப்ஷன் உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்க உள்ளதால், அடுத்து உருவாக்கப்பட உள்ள, ஜேம்ஸ்பாண்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்பொழுதே அதிகரித்துள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS