தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்! கொரோனாவால் மோசமான உடல்!

20 January 2021 அரசியல்
aiadmkmlakamaraj.jpg

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தற்பொழுது உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் காமராஜிற்கு, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர், பூரண குணமடைவதற்கு முன்பே வீட்டிற்குச் சென்றதால், அவருடைய உடலானது கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், அவருக்கு கடுமையான மூச்சுப் பிரச்சனை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர் எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றின் காரணமாக, அவருக்கு தீவிர மூச்சுப் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது எனவும், ஆக்சிஜன் அளவானது அவருடைய உடலில் குறைந்துள்ளது எனவும், அவருக்கு எக்மோ கருவியின் மூலம் சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றது எனவும், அம்மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS