தலைவன் இருக்கின்றான் மீண்டும் ஆரம்பமாக உள்ளது! ரசிகர்கள் உற்சாகம்!

17 July 2019 சினிமா
kamal-arr.jpg

சபாஸ் நாயுடு படத்திற்கு பிறகு, கமல்ஹாசன் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை. இந்தியன்-2 தான் நான் நடிக்கும் கடைசிப் படம் என, அவர் ஏற்கனவே கூறிவிட்டார். இந்நிலையில், இடையில் அறிவித்து கைவிட்டதாகக் கருதப்பட்டத் திரைப்படம், தலைவன் இருக்கின்றான்.

இந்தத் திரைப்படத்தினை, அரசியலுக்குள் வருவதற்கு முன், கமல்ஹாசன் அறிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, கமல்ஹாசன் நடிக்கும், இந்தியன்-2 திரைப்படமும் தள்ளிப் போனது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கரும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் சமாதானமான நிலையில், தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இந்தியன்-2 பணியில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்.

அதே சமயம், சபாஷ் நாயுடு படத்தினைப் பாதி வரையில் எடுத்திருந்த கமல்ஹாசன், அப்படத்தினை அப்படியேக் கைவிட்டுவிட்டார். இதன் காரணமாக, லைகா நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதது. இதனைத் தொடர்ந்து, அதனை ஈடு கட்டும் விதத்திலும், ஏற்கனவே அறிவித்தப் படமான தலைவன் இருக்கின்றான் படத்தினை எடுக்க உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் சூட்டிங் செல்வார் எனவும், கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தார்.

அவருடன் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து எடுத்துள்ளப் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி, வருகிறது. மேலும், கமல்ஹாசன் செய்துள்ள டிவிட்டில், தலைவன் இருக்கின்றான் படத்திற்காக, ஏஆர் ரகுமானுடன் பேசியதாக கூறியிருக்கிறார். இதிலிருந்து இப்படத்தினை, விரைவில் நாம் திரையில் கண்டுகளிக்கலாம் எனத் தெரிகிறது.

ஒரு சந்தேகம். தியேட்டரில் பெயரைப் போடும் பொழுது, உலக நாயகன் என போடுவாரா அல்லது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எனப் போடுவாரா?

HOT NEWS