மத்திய தொல்லியல் படிப்பு! தமிழ் மொழி மீண்டும் சேர்ப்பு!

09 October 2020 அரசியல்
modi1.jpg

தமிழகத்தில் எழுந்த கடுமையான எதிர்ப்பு மற்றும் கண்டனத்திற்குப் பிறகு, தமிழ் மொழியினை மத்திய தொல்லியல் படிப்பிற்கான கல்வித் தகுதியாக தற்பொழுது மத்திய அரசு சேர்த்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் அமைந்திருக்கும், மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இது ஒரு தொல்லியல் படிப்பிற்கான, மத்திய அரசின் கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரியில் தற்பொழுது தொல்லியல் சார்ந்து 2 ஆண்டு பட்டயப்படிப்பிற்கான அறிவிப்பானது வெளியாகி உள்ளது. அதில், சமஸ்க்ருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றுக் கூறியுள்ளது.

இதில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ் மொழியானது வேண்டுமென்றே, நீக்கப்பட்டு உள்ளது எனவும், இது கலாச்சாரப் படையெடுப்பு எனவும், திமுக தலைவர் முகஸ்டாலின் தெரிவித்து வந்தார். தமிழ் மொழியினையும் இணைக்க வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது அந்தப் படிப்பிற்கான கல்வித் தகுதிகளுள் ஒன்றாக, தமிழ் மொழியும் இணைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும், மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ், மலையாளம், சமஸ்க்ருதம், கன்னடம், தெலுங்கு மொழிகள் தற்பொழுது இணைக்கப்பட்டு உள்ளன.

HOT NEWS