ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகல்!

29 August 2020 விளையாட்டு
sureshrainaleft.jpg

ஐபிஎல் நடப்பாண்டுத் தொடரில் இருந்து, சுரேஷ் ரெய்னா திடீரென்று விலகியுள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியானது, மார்ச் மாதம் நடைபெற இருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவால் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியினை, வருகின்ற செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்து திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக, ஐபிஎல் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்பொழுது அமீரகம் சென்றுள்ளனர். சென்னை அணியின் வீரர்கள் தற்பொழுது, அங்குள்ள சொகுசு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருடன் சேர்த்து மொத்தம் 14 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைக் கேப்டன், சுரேஷ் ரெய்னா, தற்பொழுது தன்னுடைய தனிப்பட்டக் காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். இதனால், அவர் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS