நாடாளுமன்றம் கட்டும் விவகாரம்! உச்சநீதிமன்றம் அனுமதி!

05 January 2021 அரசியல்
newparliament.jpg

நாடாளுமன்றம கட்டத் தடை கோரிய வழக்கில், நாடாளுமன்றத்தினைக் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், 971 கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக இந்தியாவிற்கான நாடாளுமன்றம், தலைமை செயலகம், மத்திய அமைச்சர்களுக்கான கட்டிடமானது கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழாவனது கடந்த 7ம் தேதி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி கட்டுமான நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

ஆனால், இந்தத் திட்டத்திற்காக பழைய மரங்களை எல்லாம் வெட்ட வேண்டி இருக்கும் எனவும், அதற்காக சுற்றுச்சூழல் விதிகளை மாற்றியதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது, இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், தினேஷ் மாஹேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகிய அமர் விசாரித்தது.

அப்பொழுது புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது எனவும், கட்டுமானத்தின் பொழுது மாசு பரவாமல் இருப்பதற்கு நீர் தெளிப்பான்களையும், ஸ்மாக் டவர்களையும் அமைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவானது, வருகின்ற 2022ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. அந்த விழாவானது, புதிய நாடாளுமன்றத்தில் கொண்டாடப்படும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

HOT NEWS