ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறைப்பு! விரைவில் இந்திய அணியில் இடம் பெற உள்ளார்!

21 August 2019 விளையாட்டு
sreesanth.jpg

ஐபிஎல் போட்டிகளல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விளையாட வாள்நாள் தடை விதித்தது பிசிசிஐ. இதனை முன்னிட்டு, ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற, தடை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது, ஏழு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அவருடைய தண்டனையை டி கே ஜெயின் ஏழு ஆண்டுகளாக குறைத்தார். அதாவது 13-09-2013 முதல் 13-09-2020 வரை, அவருடைய தண்டனை மாற்றம் அடைந்தது.

இதனை முன்னிட்டு, ஸ்ரீசாந்த், 2020ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட அனுமதிக்கப்படுவார் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் வேகமாகப் பந்து வீசுவதில் புகழ் பெற்றவர். குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வீரர்களின் விக்கெட்டுகளை சாய்ப்பதில் கைத்தேர்ந்தவர்.

இருப்பினும் இவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படமாட்டர் என்கின்றனர், கிரிக்கெட் விமர்சகர்கள். பிட்னஸ் மற்றும் ஃபார்ம் இவற்றைக் கருத்தில் கொண்டு, இவர் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்காது. ஆனால், இனி அவரால், கிரிக்கெட் கமெண்ட்ரி, அம்பயர், மற்றும் அது சார்ந்த துறைகளில் ஈடுபடலாம் என கருதுகின்றனர்.

HOT NEWS