பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

14 October 2019 விளையாட்டு
souravganguly.jpg

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கொல்கத்தாவின், சௌரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, கங்குலி செயல்பட்டு வருகின்றார். அவர் வரும் 2020ம் ஆண்டு செப்டம்பர் வரை, அப்பதவியில் இருப்பார். இவர் தற்பொழுது ஒரு மனதாக, எவ்வித எதிர்ப்பும் இன்று, பிசிசிஐ அமைப்பின் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சங்கத்திற்காக நடைபெற்றத் தேர்தலில், அமித் ஷாவின் மகனும், குஜராத் கிரிக்கெட் சங்கத்தினைச் சேர்ந்த ஜெய் ஷா செயலாளராகவும், முன்னாள் தலைவர் அணுராக் தாகூரின் சகோதரர் அருண் தோமால் பொருளாளராகவும், ஜெயேஷ் ஜார்ஜ் துணை செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சவுரவ் கங்குலியைப் பற்றி, நம் இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திற்கும் தெரிந்த நபர். சுமார் 400க்கும் மேற்பட்ட போட்டிகளில், விளையாடியுள்ள அவர், பலக் கோப்பைகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS